Tuesday, November 6, 2012

திண்டுக்கல்

மீபத்தில்  திண்டுக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திண்டுக்கல் மற்றும் அருகே உள்ள அம்பாத்துரை, சின்னாளபட்டி.. காந்தி கிராமம் பற்றி ஒரு பார்வை. !

ரயிலில் சென்றால் திண்டுக்கலுக்கு பின் ஐந்தே நிமிடத்தில்  அம்பாத்துரை  வருகிறது. சென்னையிலிருந்து செல்லும் ரயில்களில் மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே அம்பாத்துரையில் நிற்கிறது. இல்லாவிடில் திண்டுக்கல்லில் இறங்கி பின் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அம்பாத்துரைக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும். 

அம்பாதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமங்கள் சின்னாளபட்டி.. காந்தி கிராமம். அவற்றுக்கு அருகில் உள்ள டவுன் என்றால் அது அம்பாத்துரை தான் !

ரயிலில் நானும் நண்பன் மணியும் சென்றோம். அஞ்சால் அலுப்பு மருந்துக்கு Third ஏ. சி கோச்சில் விளம்பரம் செய்திருந்தனர். "அஞ்சால் அலுப்பு மருந்து ஜலதோஷம்.... உடம்பு வலி..கை கால் உளைச்சல் இவற்றுக்கு ஒரே தீர்வு அஞ்சால் அலுப்பு மருந்து " என்று டிவியில் விளம்பரம் பார்த்து நொந்திருப்பீர்களே அதே மருந்து தான் ! எப்படி தான் Third ஏ. சி யில் பயணம் செய்வோர் இந்த விளம்பரம் பார்த்து கடையில் போய் "அஞ்சால் அலுப்பு மருந்து தாங்க" என கேட்டு வாங்குவாங்கன்னு நம்ம்ம்பி விளம்பரம் செய்தாங்களோ தெரியலை !

ரயிலில் பயணிக்கும் போது நடந்த ஒரு bizarre நிகழ்ச்சி. டாய்லட் சென்ற ஒருவர் கதவை ஒழுங்கா சாத்தலை. அனேகமா லாக் போட்டு பூட்டாம , வெறுமனே சின்னதா திறந்து மூடும் லாக் மட்டும் போட்டுட்டு உள்ளே போனார் போல. காற்றிலோ வேறு யாரோ அதை வெளியிருந்து திறந்து விட, கதவு திறந்து கிடக்கிறது. அடுத்த ஸ்டேஷனில் இறங்க வெளியே வந்த மக்கள் இந்த கொடுமையை பார்த்து விட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி போனார்கள். ரயிலில் அவசரதுக்கு போனாலும் கதவை ஒழுங்கா பூட்டிட்டு போகணும் என்று தெரிஞ்சுக்குவோம் மக்களே ! 

காலை நேரம் நாங்கள் சென்ற மார்ச் இறுதியிலும் கூட செம குளிராக இருந்தது. இதற்கு காரணம் அருகில் இருக்கும் சிறு மலை தான். .


கொடைக்கானல் மலை அடிவாரத்தில், திண்டுக்கலுக்கும் கோடை ரோடுக்கும் இடையே உள்ளது இந்த ஊர். இந்த ஊரில் இருக்கும் சிறுமலை, ஏலகிரி போல 21 கொண்டை ஊசிகளுடன் கூடிய, சிறிய, அழகிய மலை. இங்கு மலையின் மேலே நல்ல குளிராக இருக்குமென்றும் கூறினர். திண்டுக்கல் மற்றும் அம்பாதுரையில் உள்ள வி.ஐ. பி கள் மலை மேல் நிறைய நிலம் வாங்கி வைத்து, தாங்கள் சென்று தங்க மட்டும் சில கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்துள்ளனராம். மலை மேலே செல்ல அரசு பேருந்து உள்ளது. ஆனால் நாம் சென்று தங்க வேறு லாட்ஜ் எதுவும் கிடையாது. அங்கு கெஸ்ட் ஹவுஸ் வைத்திருக்கும் நபர்களை தெரியுமானால், அவர்கள் மூலம் அங்கு தங்கலாம். 

சிறுமலைக்கு கீழ் விவசாயம் செய்ய நல்ல சூழல் நிலவுகிறது. எனவே மலையின் கீழ் உள்ள அம்பாதுரையில் பல்வேறு பழம், பூ போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. 

திராட்சை தோட்டம் முதன் முதலில் பார்த்தது இங்கு தான். அடடா ! என்ன அழகு !! கொடி போல் வளரும் திராட்சை தோட்டத்தில், கொடி படர ஊன்றப்பட்ட குச்சிகளை தவிர  தரையில்  எதுவும் இல்லை. 
 

நாளா புறமும் குச்சிகள் இருக்க, அதன் மேல் பசுமையாக கொடிகள்.. ஆங்காங்கு திராட்சைகள். பார்க்கவே அற்புதமாக உள்ளது. திராட்சை தோட்டம் பார்க்காத நண்பர்கள் இந்த வீடியோ அவசியம் பாருங்கள். 

இங்கு கருப்பு திராட்சை தான் சாகுபடி செய்கிறார்களாம். பச்சை  திராட்சை  சாகுபடி செய்ய செலவு அதிகம் ஆகுமாம். திராட்சை தவிர அவரை, ரோஜா, துளசி (ஆம்... துளசி) இவையும் சாகுபடி நிறையவே நடக்கிறது. 

இங்குள்ள பல்வேறு தோட்டங்களிடையே பயணித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த மரத்தை பாருங்கள் 

 

பத்து கை ராவணன் போல் என்ன ஒரு அழகு !

நாங்கள் பார்த்த தோட்டத்தில் சில கின்னி கோழிகள் சுதந்திரமாய் சுற்றி திரிந்தன. 



அவை ஏன்   வளர்க்கிறீர்கள் என கேட்ட போது, தூரத்தில் ஆள் வந்தாலும் இவை சத்தம் எழுப்பும் என்றும் அப்போது தோட்டத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியே வந்து யார் வந்துள்ளார் என பார்க்கலாம் என்றும் கூறினார். திருட்டு நடக்காமல் தடுக்க இவை உதவுகின்றன !

செல்லும் வழியில் சிடி-க்களை நூலில் கட்டி வயலில் கட்டியிருந்ததை காண முடிந்தது. இவற்றிலிருந்து வரும் வெளிச்சம் பார்த்து விட்டு காக்காக்கள் பழங்களை கொத்தாதாம் ! கிராமத்து மக்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு !

அம்பாத்துரையில் மீன்கள் செம பிரெஷ்-ஆக கிடைக்கின்றன. அருகில் இருக்கும் டேமில் மீன் பிடித்து உடனே ஊருக்கு விற்பனைக்கு வருவதால் விலை குறைவாக ஆனால் புதிதான மீன்கள் எங்கும் கிடைக்கின்றன. 

அம்பாதுரையில் ஒரு தோட்டத்தில் உள்ள அழகிய குளம் இது 



***********
அம்பாத்துரை மற்றும் அதை சுற்றி நிறைய தோட்டங்களும் காடுகளும் இருப்பதால் மக்கள் மிக சாதாரணமாக வேட்டைக்கு செல்கின்றனர்.
"ஏம்பா நேத்து (வேட்டைக்கு) போனியே? என்ன கிடைச்சுது?" என பரஸ்பரம் விசாரித்து கொள்கிறார்கள். முயல், காட்டு பன்றி போன்றவை வேட்டையில் கிடைக்க, தம் குடும்பத்துக்கு எடுத்து கொண்டு மற்றதை விலைக்கோ, நண்பர்களுக்கோ கொடுத்து விடுகிறார்கள். வெய்யில் காலம் என்றால் விலங்குகள் உள்ளே சென்று பதுங்கி விடும் என்றும் மழை காலத்தில் தான் நன்கு வெளியே வரும், அப்போது எளிதாக வேட்டை ஆடலாம் என்று கூறினர். 

 இந்த ஊரிலேயே தயாரிக்கப்படும் குளிர் பானம் "காதலோ". இதனை ஊர் மக்கள் காதலோ என சொல்லாமல், "லவ்வோ" என சொல்கின்றனர்.



திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் ரோட்டின் மேல் இந்த ஊர் அமைந்துள்ளதல்லவா? இந்த ரோடு சில வருடங்களுக்கு முன் தான்   தங்க நாற்கர சாலை ஆகியுள்ளது. 


இதன் பின் நிலங்களின் விலை இங்கு கிடு கிடு என ஏறிவிட்டதாம். முன்பு ஐந்து லட்சத்துக்கு ஒரு ஏக்கர் விற்ற நிலங்கள் மூன்று வருடங்களில் 75 லட்சம் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ! இதிலிருந்து அறியும் நீதி: உங்களுக்கு தெரிந்து எங்கேனும் நேஷனல் ஹை வே வர போகிறது எனில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி விட்டால் அடுத்த சில ஆண்டுகளில், ஹை வே வந்த பிறகு பல மடங்கு லாபம் ஈட்டி விடலாம் !

சிறுமலை

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 40 கி.மீ அருகிலும், மதுரைக்கு 40 கி.மீ அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன.[1] இல்லாக் பன்னாட்டுப் பள்ளியும் இங்கே அமைந்துள்ளது.[2] ஆண்டுமுழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதி. விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை. ஆனால் இவற்றால் நோய்கள் விளைவதாகவும் அறியப்படுகிறது.

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்குஇடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது.தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்
அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள்
  1. மதுரை 135 கிலோமீட்டர்
  2. கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
  3. திருச்சி 195 கிலோமீட்டர்
  4. சென்னை 465 கிலோமீட்டர்

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  1. பிரையண்ட் பார்க்
  2. தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
  3. தூண் பாறைகள்
  4. கவர்னர் தூண்
  5. கோக்கர்ஸ் வாக்
  6. அப்பர் லெக்
  7. குணா குகைகள்
  8. தொப்பித் தூக்கிப் பாறைகள்
  9. மதி கெட்டான் சோலை
  10. செண்பகனூர் அருங்காட்சியம்
  11. 500 வருட மரம்
  12. டால்பின் னொஸ் பாறை
  13. பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
  14. பியர் சோலா நீர்வீழ்ச்சி
  15. அமைதி பள்ளத்தாக்கு
  16. குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  17. செட்டியார் பூங்கா
  18. படகுத் துறை
  19. வெள்ளி நீர்வீழ்ச்சி
  20. கால்ஃப் மைதானம்
  • கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
  • கொடைக்கானலில் கிராமம் அதிகமாக இருகின்ரன.

karanthamalai