Friday, January 18, 2013

சிறுத்தை

திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில், 2 வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார். ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார். அலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு. இரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது. இதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது. கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது. ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2010/07/28/thirupathi-child-panther-attack.html

3000 ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி! – திகில் சம்பவம்


3000-years-old-ghost-found-in-india
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது.
மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். துள்ளி குதித்து ஆடியபடியே அந்த பெண் பேசினார். அவர் சொன்ன விஷயங்களை கேட்டு கிராம மக்கள் கதிகலங்கி போனார்கள்.
‘இந்த குளத்துல சாந்தி என்ற ஒரு பொண்ண உசிரோட புதைச்சிட்டாங்க. அந்த ஆன்மா இங்கயே சுத்திக்கிட்டு இருக்கு. யாரும் குளத்த விட்டு வெளியே போகக் கூடாது. மீறி போனா உங்க உசிரு உங்களுக்கில்ல’ என்று ஆக்ரோஷமாய் கத்தினார் அந்த பெண். அவரது பேச்சிலும், செய்கையிலும் இருந்த பெரிய மாற்றத்தை கவனித்த மக்கள் பீதியில், சிலைபோல அந்த இடத்திலேயே நின்றனர். ஆனால் தேவி என்ற பெண் குளத்தை விட்டு வெளியே போக முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.
அவரை போல குளத்தில் இருந்த போக முயன்ற சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பார்த்த நடுக்கத்தில், ஆண்களும் பெண்களும் குளத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றார்கள்.
‘உடனே பூஜை பண்ணினாதான் பேய் விட்டு விலகும்’ என்று சிலர் சொன்னதால், எலுமிச்சை பழம், சூடம் கொண்டு வந்து பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஆவேசமாக ஆடிய பெண் சகஜ நிலைக்கு வந்தார். அவசரஅவசரமாக எல்லோரும் குளத்தை விட்டு வெளியே வந்து பயத்தோடே வீட்டுக்கு ஓடினர். குளத்தில் இன்னொரு மண்தாழியும் இருந்திருக்கிறது.
பேய் பயத்தில் அதில் யாரும் கைவைக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பிறகும் பல பெண்கள் ஆக்ரோஷமாக கத்தியபடி ஆடியுள்ளனர். இதனால் கொண்டாரெட்டிபாளைய மக்களுக்கு ஆவி பயம் இன்னும் முழுமையாக அகலவில்லை.
கிராமத்தில் இருக்கும் யாரும் குளத்து பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது.
இரவு நேரங்களில் அந்த பக்கம் செல்லவே அஞ்சுகிறார்கள். ‘சாந்திங்ற பொண்ண உசிரோட பொதைச்சதா, ஆவி பிடிச்சு ஆடிய பொண்ணு சொன்னா. தாழி உடைஞ்சப்போ வந்த புகை பட்டுதான் அந்த பொண்ணு அப்படி ஆடுச்சு. எங்க நல்ல நேரம். ஆவி யாரையும் பலி வாங்கல. இப்போ குளத்துப்பக்கம் யாரும் போகறது கிடையாது. எதாவது பரிகாரம் செஞ்சு, ஆவிய மறுபடியும் தாழியில அடைச்சாதான் எங்க ஊருக்கு நல்லது. அதுவரைக்கும் எங்களுக்கு பயமாத்தான் இருக்கு’ என்று சொல்லும் பெண்களின் பேச்சில் பேய் பயம் தெரிந்தது.
இந்த மண்தாழி பற்றி ஆய்வாளர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் வந்து ஆய்வு செய்து சில மண்டையோடுகளை தாழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இந்த மண்டையோடுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆவேசம் கொண்டு ஆடிய அந்த பெண்ணை நேராக பார்த்த மக்களுக்கு ஆவி பயம் இன்னும் தீரவில்லை.

மனித உடம்பின் சில அதிசியங்கள்


மனித உடம்பின் சில அதிசியங்கள்


மனித உடம்பின் சில அதிசியங்கள்

1.         ஒரு சராசரி மனிதனின் மூளையில் சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்கள் இருக்கும்.
2.         மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.
3.         கழுத்து பகுதியில் இருக்கும் கூரான எலும்பு ஆடம்ஸ் ஆப்பிள் என்று மருத்தவர்கள் செல்லமாக அழைப்பர்..
4.         உடம்பில் முட்டுகள் இல்லாத பகுதி உங்கள் தொண்டையில் இருக்கும் ஹையாடு எலும்பு ஆகும்.
5.         உங்கள் கண்களை திறந்து கொண்டு கண்டிப்பாக உங்களால் தும்ப  முடியாது.
6.         ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நமது வயிறு முகஸ் என்ற ஒரு விதமான திரையை உருவாக்கி நம் வயிறை பாதுகாக்கிறது.
7.         நீங்கள் பேசும் போது சுமாராக 72 மாறுபட்ட தசைகள் வேலை செய்வதால் தான் உங்களால் சத்தத்துடன் பேச முடிகிறது.
8.         உங்கள் சுவை உணர்வுகள் 10 நாற்களுக்கு ஒரு முறை இறந்து புதுபிக்கப்படுகின்றன.
9.         நீங்கள் இரும்பும் போது உங்கள் வாயில் இருந்து வெளியேறும் அசுத்தமான காற்று தடைகள் இல்லாமல் இருந்தால் சுமார் 60 மைல் (96.5 கி.மீ) தூரம் வரை செல்லும்.
10.      உங்கள் தொடை எலும்பு வீடு கட்ட பயன்படும் கான்க்ரீட் விட பலம் வாய்ந்தது.
11.      நீங்கள் தும்பும் போது உடம்பில் அனைத்து இயக்கமும் நிறுத்த படுகிறது, உங்கள் இதயம் உற்பட.
12.      உங்கள் உடம்பின் மிக சக்தி வாய்ந்த தசை உங்கள் நாக்கு.
13.      பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு வேகமாக கண் சிமிட்டும் சக்தி வாய்ந்தவர்கள்.
14.      ஒருவர் ஒரு கண்ணின் பார்வை இழக்கும் போது அவரின் மொத்த பார்வை திறனில் 5/1 பங்கு மட்டும் அழியும், ஆனால் அவர் மொத்தமாக ஆழம் உணரும் திறனை இழந்து விடுகிறார்.

எழுத்து வடிவம் மற்றும் ஆக்கம்,
    செந்தில்குமார்.தி,கல்லுரி விரிவுரையாளர்,
    இயன்முறை மருத்துவர்.

கோல மயில்


கோல மயில்


நம் தேசியப் பறவை மயில் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அழகான பறவை,இனம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை,அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை,அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும்பின்னர் Peacock எனவும் மருவியது.


திணை:
(இராச்சியம்)      விலங்கு
    
 

தொகுதி:       முதுகுநாணி

வகுப்பு:         பறவை

வரிசை:        Galliformes

குடும்பம்:       Pavoninidae

பேரினம்:        Pavo


நான் நான்காம் வகுப்பு  படிக்கும் போது தமிழ் புத்தகத்தில் மயில் பற்றின பாடம் ஒன்று இருந்தது.வகுப்பில் அநேகம் பேருக்கு பிடித்த பாடம் என்று நினைக்கிறன்,  இணையதளத்தில் எதார்த்தமாக கண்ணில் பட்டதை, நம் மக்கள் சிலர் மயில் கோலமிட்டுருப்பதை சின்ன  கோர்வையாக தந்துள்ளேன். கோல மயில்கள் இங்கே சென்று பார்க்கவும்.
 கடைசி இரண்டு மயில்கள்,பதிவின் வலதுபுறம் உள்ள வெள்ளை நிற மயில் வித்தியாசமான அதிசியமானதாய்க் கருதுகிறேன்.


பள்ளிக் காலங்களில் புத்தகப் பக்கங்களில் மயில் இறகை வைத்திருந்தால்,குட்டிப் போடும்னு ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மயில் இறகுகளை சேகரித்த ஞாபகம் வருகிறது.இந்த மூட நம்பிக்கையை  துவங்கியது யாரோ ?. இந்த காலத்து பிள்ளைகள்   நடைமுறை உண்மைகளை  சொன்னால்  கூட  ஆயிரம் கேள்விகள்   கேட்டு   ஊர்ஜிதப்படுத்திக்  கொள்கிறார்கள்.


சில கோவில்களிலும்,சில விலங்கியல் பூங்காக்களிலும்  மயில்கள் இருந்தால் ஆசையாகப் போய் பார்ப்போம்.சில கிராமங்களில் மயில்கள் அதிகம் காணப்படும் . அங்குள்ள மக்கள் மயில்களை கோழி போவது போல சாதாரணமாகப் பார்ப்பதும் ஆச்சர்யம்தான்.

அதிசியங்கள்


இயற்கை இதய வடிவ அதிசியங்கள்


இந்தியாவின் சுற்றுலாப்பகுதியில் ஒன்று. நீலகிரி மலையும்,கேரளாவின் வெல்லாரி மலையும் இணையும் இடமாம்,சீம்ப்ரா  உச்சி எனப்படுகிறது. இது வற்றாத ஏரி


ஒஹியொவில் அமைந்துள்ள ஏரி
படகோனியாவின் குட்டியர்ஸ் ஏரியில் இதய வடிவ தீவு


தைவான் நாட்டில் தைபே மாநகரத்தில் இப்படி ஒரு ஈரநிலம் காணப்படுகிறது.கெளண்டு நேச்சுரல் பார்க் என அழைக்கப்படுகிறதாம்.


கரொசியா(croatia)கலேசஞ்சக் தீவு

ஃபிஜி நாட்டின் டவுரா தீவு

 வடக்கு ஸ்பெயினில் கேண்டப்ரியா என்ற இடத்தில் அமைந்துள்ள இதய வடிவ காடு.

புது கலடோனியோவில் உள்ள  ஒரு வெப்பமண்டல சதுப்புநில தாவர வகைக் காடு


                             

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பவளப்பாறை