Saturday, March 16, 2013

வாழை


வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்டபேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது.[1]இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.[2]
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும். சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள்3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா(24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
வாழைப் பழங்கள் காய்க்கும் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

இது தவாரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன.

எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது.

வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமது அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம். 
webdunia photo
WD
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.

வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment