Friday, January 18, 2013

கோல மயில்


கோல மயில்


நம் தேசியப் பறவை மயில் என்று நம் அனைவருக்கும் தெரியும்.அழகான பறவை,இனம் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை.
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை,அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை,அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும்பின்னர் Peacock எனவும் மருவியது.


திணை:
(இராச்சியம்)      விலங்கு
    
 

தொகுதி:       முதுகுநாணி

வகுப்பு:         பறவை

வரிசை:        Galliformes

குடும்பம்:       Pavoninidae

பேரினம்:        Pavo


நான் நான்காம் வகுப்பு  படிக்கும் போது தமிழ் புத்தகத்தில் மயில் பற்றின பாடம் ஒன்று இருந்தது.வகுப்பில் அநேகம் பேருக்கு பிடித்த பாடம் என்று நினைக்கிறன்,  இணையதளத்தில் எதார்த்தமாக கண்ணில் பட்டதை, நம் மக்கள் சிலர் மயில் கோலமிட்டுருப்பதை சின்ன  கோர்வையாக தந்துள்ளேன். கோல மயில்கள் இங்கே சென்று பார்க்கவும்.
 கடைசி இரண்டு மயில்கள்,பதிவின் வலதுபுறம் உள்ள வெள்ளை நிற மயில் வித்தியாசமான அதிசியமானதாய்க் கருதுகிறேன்.


பள்ளிக் காலங்களில் புத்தகப் பக்கங்களில் மயில் இறகை வைத்திருந்தால்,குட்டிப் போடும்னு ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மயில் இறகுகளை சேகரித்த ஞாபகம் வருகிறது.இந்த மூட நம்பிக்கையை  துவங்கியது யாரோ ?. இந்த காலத்து பிள்ளைகள்   நடைமுறை உண்மைகளை  சொன்னால்  கூட  ஆயிரம் கேள்விகள்   கேட்டு   ஊர்ஜிதப்படுத்திக்  கொள்கிறார்கள்.


சில கோவில்களிலும்,சில விலங்கியல் பூங்காக்களிலும்  மயில்கள் இருந்தால் ஆசையாகப் போய் பார்ப்போம்.சில கிராமங்களில் மயில்கள் அதிகம் காணப்படும் . அங்குள்ள மக்கள் மயில்களை கோழி போவது போல சாதாரணமாகப் பார்ப்பதும் ஆச்சர்யம்தான்.

No comments:

Post a Comment